நடன இயக்குனரும் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்சின் மனிதநேய செயல்கள் நாம் அனைவரும் அறிந்ததே.
அவர் செய்து வரும் சேவைகளில் ஒன்று உடல் அளவில் சிறப்பு திறன் கொண்டு இருப்பவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் முயற்சி.
அப்படி அவரது குழுவில் இருக்கும் தான்சேன் என்ற இரு கையும் இல்லாத ஒரு வாலிபர் மிகுந்த இசைத் திறமை கொண்டிருக்கிறார். இரண்டு கைகளும் இல்லாவிட்டாலும் அவரால் கீபோர்டு வாசிக்க முடிகிறது. டிரம்ஸ் இசைக்க முடிகிறது.
இந்த திறமைகளைக் கொண்டு சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெறும் ‘ வாத்தி கம்மிங் ‘ என்ற பாடலை அற்புதமாக இசை வடிவில் நமக்கு தந்திருக்கிறார் தான் சேன்.
இவரது குறிக்கோளே அனிருத் இசையில் கொஞ்சமாவது வாசிக்க வேண்டும் என்பதுதான். அனிருத் இசைக்கழுவில், தான் இசை ப்பதை விஜய் பார்க்க வேண்டும் என்பதுதான் இவரது லட்சியமாம்.
இதனை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் அனிருத்திடம் இதை ஒரு அன்பு வேண்டுகோளாக விடுத்திருக்கிறார். அனேகமாக இவரது வேண்டுகோள் விரைவில் நடந்தேற வாய்ப்பு இருக்கிறது.
தான்சேன் அபாரமாக இசை இசைக்கும் மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடல் வீடியோ கீழே….