November 22, 2024
  • November 22, 2024
Breaking News
October 27, 2019

20 மற்றும் 25 லட்சம் ஏலம் போன மோடி புகைப்படங்கள்

By 0 810 Views

தனக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார்.

மத்திய கலாசார அமைச்சகம் அந்த பரிசுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை டெல்லியில் நடத்தியது.  அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

செப்டம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கிய இந்த ஏலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து பொருட்களும் ஏலம் போயின.  

இந்த ஏலத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கினர். மேற்படி பொருட்களுக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அவற்றுள் அதிகபட்சமாக, தேசிய கொடி பின்னணியில் மகாத்மா காந்தியுடன் பிரதமர் மோடி இருப்பது போன்று வரையப்பட்ட ஓவியம் ஒன்று ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது. பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியிடம் ஆசிபெறும் புகைப்படம் ஒன்று ரூ.20 லட்சத்துக்கு விற்பனையானது.

இவற்றின் மூலம் கங்கை புனிதமடையட்டும்..!