கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சென்னை வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர சம்மன் அனுப்பிியது.
அதை ஏற்று இன்று விசாரணைக்கு சென்ற கமல்ஹாசனை கிட்டத்தட்ட 3 மணி நேரம் காவல் நிலையத்தில் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசை கண்டித்து இருக்கிறது.
அந்த அறிக்கை கீழே…