January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • ஆகஸ்ட் 1-இல் திரையரங்குகள் திறப்பா ? – கடம்பூர் ராஜு பதில்

ஆகஸ்ட் 1-இல் திரையரங்குகள் திறப்பா ? – கடம்பூர் ராஜு பதில்

By on July 17, 2020 0 850 Views

வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக திரையரங்குகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த செய்திகள் நேற்று சமூக வலைதளங்களில் வலம் வரவே இதுகுறித்து இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு தற்போது எவ்வித தளர்வுகளும் வழங்கப்பட மாட்டாது” என அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.