October 30, 2025
  • October 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு நள்ளிரவில் ஸ்கேன் செய்தது ஏன்?
August 20, 2019

ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு நள்ளிரவில் ஸ்கேன் செய்தது ஏன்?

By 0 927 Views

புகழ்பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் டிவி சுந்தரம் அய்யங்காரின் கொள்ளுப்பேரன் நிக்கி சுந்தரம், இப்போது சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்ஏ பாஸ்கரன் இயக்கத்தில் ‘மெய்’ படத்தின் ஹீரோ ஆகிறார்.

இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கும் பாஸ்கரன் புகபெற்ற இயக்குநர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் இன்று மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் இத்திரைப்படம் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாம்.  

நிக்கி சுந்தரம், ஐஸ்வரியா ராஜேசுடன் இணைந்து  சார்லி, கிஷோர், வினோத் கிருஷ்ணன், அஜய் கோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

Nikki Sundaram, Aishwarya Rajesh in Mei

Nikki Sundaram, Aishwarya Rajesh in Mei

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “இந்தப்படத்தின் கதையைக் கேட்டு மட்டுமே நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். இன்றைக்கு மருத்துவத்தில் நிறைய ஊழல்கள் நடக்கின்றன.

எனக்கே ஒரு திடுக்கிட வைக்கும் அனுபவம் நடந்தது. சாதாரண காய்ச்சலுக்காக ஒரு மருத்துவ மனையில் சேர்ந்தேன். நடு இரவில் வைத்து இசிஜி, ஸ்கேன் எல்லாம் எடுத்தார்கள்.

“சாதாரண காய்ச்சலுக்கு ஏன் இதெல்லாம் எடுக்கிறீர்கள்..?” என்று சண்டை போட்டேன். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் டிஸ்சார்ஜ் செய்ய முடியாதென்று அன்றைக்கும் பில் போட்டு கடைசியில் மருந்தாகக் கொடுத்தது வெறும் ‘டோலோ 650 மாத்திரை’ மட்டும்தான்.

இந்த ஒருநாள் மருத்துவத்துக்கு ஒரு லட்ச ரூபாய் பில் போட்டுவிட்டார்கள். வேறு சில மருத்துவமனைகள், மருத்துவர்கள் பொறுப்பாக இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள். அதைத்தான் இந்த ‘மெய்’ படம் சொல்கிறது..!” என்றார்.

‘மெய்’தான் ஐஸ்வர்யா..!