லதா ரஜினிகாந்தின் அக்கா மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நடிகை மதுவந்தி சமீபத்தில் நாடகம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு அவரது விசா முறையற்று இருப்பதால் கைதானதாகவும், அவரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் இமிக்ரேஷன் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் பரவின.
இதைத் தொடர்ந்து மதுவந்தி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் விசா முறையாக இல்லையென்று அதிகாரிகள் சொன்னதால் தாங்களே சென்னை வந்து சரியான விசாவுக்கு (P3 Category) விண்ணப்பித்ததாக அறிவிக்கிறார். மற்றபடி கைது செய்யப்பட்டதாக வந்ததெல்லாம் வீண் வதந்தி என்றும் சொல்கிறார்.
நல்லது. ஆனால், இதே போல் கடந்த முறையும் முறையற்ற விசாவில் அவர் வெளிநாடு சென்று இமிக்ரேஷனில் கடுமையாக எச்சரிக்கப்பட்டார் என்றும் ஒரு செய்தி உண்டு. இதில் நமக்கு எழும் நியாயமான கேள்வி என்னவென்றால் அவர் தெரிந்தேதான் இப்படி தவறு செய்கிறாரா என்பதுதான்.
முறையான விசா எடுப்பதில் அவருக்கு என்ன பிரச்சினை. தவிரவும் அவரது அப்பா ஒய்.ஜி.மகேந்திரன் தன் நாடகக் குழுவினருடன் இப்படி நூற்றுக்கணக்கான முறை நாடகம் நடத்துவதற்காக வெளிநாடுகள் சென்று வந்தவர். அவரது ஆலோசனை கூடவா மதுவந்திக்கு இருந்திருக்காது என்பதுதான்.
ஆக, அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை ஏதோ ஒன்று இருக்கிறது..!