December 2, 2024
  • December 2, 2024
Breaking News
June 9, 2024

எல்லோரது திட்டிலும் பாராட்டிலும்தான் நான் ஐம்பது படம் முடித்துள்ளேன் – விஜய் சேதுபதி

By 0 269 Views

நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நடிகர் வினோத், “‘ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக ‘மகாராஜா’ அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் சுதன் சாருக்கும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் நித்திலனுக்கும் நன்றி”.

எடிட்டர் ஃபிலோமின்ராஜ், “இந்தப் படம் ஒரு பஸூல் போல தொடர்ந்து முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே இருக்கும். அதனால், எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஆடியன்ஸோடு சேர்ந்து படம் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்”.

நடிகை அபிராமி, “விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. அவர் பெயரைக் கேட்டதுமே உடனே ஓகே சொல்லி விட்டேன். மற்ற எல்லாமே இந்தப் படத்தில் எனக்கு போனஸ்தான். படத்தில் எல்லோருமே திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர். யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. நீங்களும் யார் என்று தெரிந்து கொள்ள தியேட்டர் வந்து படம் பாருங்கள். நன்றி”.

இயக்குநர் நித்திலன், “என்னுடைய டெக்னீஷியன்ஸ் எல்லோருமே திறமையானவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. விஜய்சேதுபதி சார் தன்மையான மனிதர். செலவு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. விஜய்சேதுபதி, அபிராமி, மம்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படம் இது என்பதால் ரொம்பவே ஸ்பெஷல். நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகை மம்தா மோகன்தாஸ், “‘எனிமி’ படத்திற்குப் பிறகு நல்ல கதை கொண்ட ‘மகாராஜா’ படம் மூலம் திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வெறும் படமாக மட்டுமல்லாது, ஒரு அனுபவம். நான் நிறைய சீனியர் நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அவர்களில் இருந்து சேது சார் வித்தியாசமானவர். அவர் கரியரில் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவார். நித்திலன் திறமையான இயக்குநர். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.

நடிகர் விஜய்சேதுபதி, ” ராமோஜிராவ் என்ற ஜாம்பவானின் மறைவு எனக்கு வருத்தம். அவருக்குத் தலை வணங்குகிறேன். என்னுடைய ஐம்பதாவது படமாக ‘மகாராஜா’ அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வினோத், கல்கி, அபிராமி, மம்தா மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் அவ்வளவு அழகாக வேலைப் பார்த்துள்ளனர். ஐம்பதாவது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் என் இயக்குநர்கள், மீடியா என எல்லோரும் தந்த திட்டும் பாராட்டும்தான் காரணம். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.