January 28, 2026
  • January 28, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது..!
May 23, 2025

‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது..!

By 0 127 Views

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது*

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.