Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது. இதில் நாயகி டகோட்டா ஜான்சன், கதை நாயகியாகிறார். இவர் படத்தில் ஏற்றி ருக்கும் கசான்றா வெப் கேரக்டரும் கூட மார்வெல் காமிக்சில் இடம் பெற்ற ஒரு பாத்திரம்தான்.
மற்றபடி கதை என்று பார்த்தால் ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகள் டகோட்டா ஜான்சனுக்குக் கிடைக்கிறது.
அவசர கட்ட சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஒரு விபத்தினை அடுத்து , எதிர்காலத்தை முன்னரே அறிகின்ற ஒரு திறனைப் பெறுகிறார்.
இந்நிலையில் ஜூலியா கார்ன்வால் (Sydney Sweeney), மேட்டி பிராங்க்ளின் (Celeste O’ Connor) and அன்யா கோரசான் (Isabela Merced) – ஆகிய மூன்று பெண்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை கசான்றாவிற்கு ஏற்படுகிறது!
எதிர்காலத்தில் முக்கிய பணிகளை செயல் படுத்த வேண்டிய பொறுப்பினை தத்தம் தோள்களில் சுமந்துள்ள அவர்களை அழித்திட எசேக்கியேல் சிம்ஸ் (Tahar Rahim) என்பவன், அவர்களைத் தேடி அலைகிறான்!
கறுப்பு நிற Spider -Man உடையணிந்த அவனுக்கும் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிகின்ற சக்தி உண்டு !
அவனிடமிருந்து அம்மூன்று பெண்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில்
தன கடமையை கசான்ட்ராவால் வெற்றிகரமாக செயல் படுத்த இயன்றதா என்பதுதான் படத்தின் உச்சக்கட்டம்.
அறிமுக (பெண்) இயக்குநர் S. J Clarkson இயக்கியுள்ள இந்தப்படத்தின் தொடர்ச்சி இப்போதே வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
மாரோ பியோரேவின் ஒளிப்பதிவும் ஜோஹன் சோடர்க்விஸ்ட்டின் இசையும் ரசிக்க வைக்கின்றன.
Sony Pictures இன் இப்படத்தை திரையில் United 9 நிறுவனம் வழங்கியுள்ளது.