April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ‘ஹாட் ஸ்பாட்’ படம் மூலம் சமுதாயப் பிரச்சினையை அலச வரும் ‘அடியே’ பட இயக்குனர்
February 18, 2024

‘ஹாட் ஸ்பாட்’ படம் மூலம் சமுதாயப் பிரச்சினையை அலச வரும் ‘அடியே’ பட இயக்குனர்

By 0 86 Views

கலையரசன் – சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள். சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் அவர்கள் வெளியீடுகிறார்..

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும்  ஜிவி பிரகாஷ் குமார் நடித்த அடியே ஆகிய வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்த படம் “ஹாட் ஸ்பாட்”  இப்படத்தின்  கதை,  திரைக்கதை,  வசனம் எழுதி இயக்குகிறார். வரும் மார்ச் மாதம் இப்படம்  திரைக்கு வர உள்ளது. 

சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் பணியை மேற்கொண்டு இருக்கிறார்.

இதில் கலையரசன் கதாநாயகனாக ஆட்டோ ஓட்டுநராக  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 96 மற்றும் அடியே பட கதாநாயகி கௌரி கிஷன் இளம் மனைவியாக  வேடம் ஏற்றிருந்தார். அவரது கதாபாத்திரம்  ஆண்கள் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும்.  

மேலும் சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

“ஹாட் ஸ்பாட்” படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறும் போது,

“சமுதாயத்தில் அன்றாடம் நம் கண் முன்பே நடக்கும் சில அடிப்படை விஷயங்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் அதை கவனிக்காமல் செல்கிறோம். ஆனால் இது சமுதாயத்தில்  பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று நாம் யோசிப்போம்.அப்படிப்பட்ட  முக்கிய விஷயங்களை அலசும் கதையாக ஹாட் ஸ்பாட் படம் இருக்கும். 

திரைக்கு வந்த பிறகு இப்படம்  சமுதாயத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இது மக்களை மற்றும் மக்களை சுற்றி நடக்கும் அரசியலை குறித்து விவாதிக்கும் கதை. இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் மனங்களில் இப்படம் விழிப்புணர்வையும்,  தட்டி கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் தரும்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும்  சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.  

முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவே இப்படம் சமுதாயத்தில் என்ன விஷயத்தை பேசப் போகிறது என்ற ஆர்வத்தையும் அதிகரித்து இருக்கிறது..!” என்றார்.