August 30, 2025
  • August 30, 2025
Breaking News
September 29, 2020

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர்

By 0 597 Views

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது.

கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்.

அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு.

திரைப்பட படப்பிடிப்புகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி.

உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விமானப் போக்குவரத்து.

உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி.

உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி.

சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி.