July 4, 2025
  • July 4, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நேரம் பிரேமம் படங்களின் இயக்குனர் பெயரில் பெண்களிடம் மோசடி
November 24, 2020

நேரம் பிரேமம் படங்களின் இயக்குனர் பெயரில் பெண்களிடம் மோசடி

By 0 496 Views

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹிட்டான நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

இவர் பின்னர் மலையாளத்தில் ப்ரேமம் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கி பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில் தனது பெயரில், துணை நடிகைகளிடமும் பெண்களிடமும் போனில் பேசி சிலர் ஏமாற்றி வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் புகார் கூறியுள்ளார்.

‘9746066514’, ‘9766876651 என்ற எண்களில் இருந்து என் பெயரை சொல்லி சிலர் பேசுகிறார்கள். நான் இந்த எண்களில் கூப்பிட்டு பார்த்தால் , என்னிடமே அல்போன்ஸ் புத்திரன் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள்.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.