August 30, 2025
  • August 30, 2025
Breaking News
October 11, 2020

பாஜகவில் குஷ்பு இணைவது தமிழக பாஜக முதல்வர் வேட்பாளர் ஆகவா?

By 0 735 Views
இன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டுவருபவர் குஷ்பு.
 
இந்நிலையில் நாளை காலை இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 
இந்தத் தகவல்கள் பல நாட்களாக சொல்லப்பட்டு வந்தாலும் அந்த தகவல்களை குஷ்பு தொடர்ந்து மறுத்து வருகிறார். பாஜக அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக்கொள்கையை காங்கிரஸ் எதிர்த்து வந்த நிலையில் குஷ்பு மட்டும் அதை ஆதரித்தார்.
 
இதுபோன்ற காரணங்களால் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
ஆனாலும் சளைக்காமல் தேவையற்ற தகவல்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் குஷ்பு தெரிவித்தார்.
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளார் என்பதுதான் இன்று இரவுக்கான ஹாட் டாபிக்.
 
அதற்குள் இந்த தகவல் காட்டுத் தீயாக பரவி தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக குஷ்பூ அறிவிக்கப்பட இருக்கிறார் என்று யூகங்கள் கூறப்பட்டு வருகின்றன.
 
அரசியலில் எதுவும் நடக்கலாம்..!