April 25, 2024
  • April 25, 2024
Breaking News
December 14, 2021

திருக்குறள் எழுச்சியும் சுரபியின் கவர்ச்சியும்

By 0 396 Views

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு கேட்கிற அரசியல்வாதிகள் மக்களோட ஓட்டுப் போடும் அதிகாரத்திற்கு பயந்து குனிந்து கும்பிடு போடுவதும், ஜெயித்தபிறகு அதே அரசியல்வாதிகளுடைய பதவிக்குப் பயந்து மக்கள் குனிந்து கும்பிடு போடுவதும் எப்போது மாறும்? 

ஓட்டுப் போட்ட பிறகு மக்கள் அனைவரும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் அடிமையாகதான் இருக்க வேண்டுமா? 

தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை ஒன்றுமே செய்ய முடியாதா?;.

இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா.. என்று எண்ணும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு நம்பகமான தீர்வை, பவர்ஃபுல்லான ஆக்‌ஷன் மற்றும் கலர்ஃபுல்லான காதல் கலந்த பக்காவான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது ‘குறள் 388’

’முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.’

என்ற திருக்குறளின் 388-வது குறளை அடிப்படையாக கொண்டு, இன்றைய அரசியல் களத்தில் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்ட, அவசியமான மாற்றம் ஒன்றை மக்கள் முன்வைத்து, பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் மற்றும் சிந்திக்க தூண்டும் சமாச்சாரம் என ‘குறள் 388’ உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தை ராமாரீல்ஸ் சார்பாக ஜான் சுதீர் மற்றும் கிரண் தனமாலா தயாரித்து இருக்கிறார்கள். பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மூத்த மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான மஞ்சு விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார்.

இதுவரையில் கவர்ச்சியில் இறங்காத சுரபி இதில் கவர்ச்சிகரமான கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். இவர்களுடன் சம்பத் குமார், நாசர், ’முனீஷ் காந்த்’ ராமதாஸ், ஜெயபிரகாஷ், பஞ்சு சுப்பு, தலைவாசல் விஜய், ப்ரகதி, சுரேகா வாணி, சனா, அஜய் ரத்னம், சாக்‌ஷி ஷிவா, என பெரும் நட்சத்திரப் பட்டாளம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படம் மூலம் ஜி.எஸ். கார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல பத்திரிகையாளர் இரா. ரவிஷங்கர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். எஸ். எஸ். தமன் இசையில் பாடல்களை விவேக் எழுதியுள்ளார். கனல் கண்ணன், ஸ்டன் சில்வா, வெங்கட் ஆக்‌ஷனிலும், ப்ரவீன். கே.எல். எடிட்டிங்கிலும், ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவிலும், ஸ்ரீதர், பானு நடனத்திலும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்து இருக்கிறார்கள்.

அமெரிக்கா, தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் என பிரம்மாண்டமான பொருட்செலவில் சிந்திக்க வைக்கும் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக வெளியாக இருக்கிறது ‘குறள் 388’.