குண்டான் சட்டி படத்தின் கதை பற்றி,
“ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும், எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று விஷயங்களை ரொம்ப இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
எந்த நல்ல கருத்தையும் மாணவ பருவத்திலேயே அறிவுறுத்தினால் பிற்காலத்தில் வாழ்வியல் முறை சிறப்பாக அமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது..!” என்கிறார் இயக்குனர் பி.கே.அகஸ்தி .
7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி இந்த சிறுவயதிலேயே அனிமேஷன் படத்தை உருவாக்கியிருப்பது அனைவரின் ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது.
தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்கிறார்.
சிந்தித்த கதை களத்தை தன்னுடைய தந்தையிடம் கூற உடனே மறுப்பேதும் கூறாமல்தானே முன் வந்து தயாரித்திருக்கிறார் இயக்குனர் பி.கே.அகஸ்தியின் தந்தை, டாக்டர்.எஸ்.ஏ கார்த்திகேயன்.
திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
———————————————–
இசை- எம்.எஸ்.அமர்கீத்
எடிட்டிங்- பி.எஸ். வாசு
மக்கள் தொடர்பு – வெங்கட்
தயாரிப்பு- டாக்டர்.எஸ்.ஏ.
கார்த்திகேயன்
திரைக்கதை வசனம் பாடல்கள்-
அரங்கன் சின்னத்தம்பி
கதை இயக்கம் – பி.கே.அகஸ்தி