புடிச்சா பண்ணு, புடிக்கலயா கிளம்பு! நசநசனு பெரிய நாசா விஞ்ஞானி கணக்கா கருத்து சொல்லிக்கிட்டு!
கை தட்டுதல், விளக்கு ஏற்றுதல், இவையெல்லாம் உணர்வின் வெளிப்பாடு. எண்ணம் ஒன்றுபட்டால் யாவும் நிகழும் என்ற நம்பிக்கை சார்ந்த செயல்கள்! பல மதங்களில் இருக்கு! பகுத்தறிவாதி என்று மார் தட்டுபவர்களும் நினைவுநாள் அன்று தலைவர்கள் படம், சமாதி முன் பூத்தூவி விளக்கேற்றுதல், பிறந்தநாள் அன்று விளக்கேற்றுதல் என்று இதெல்லாம் ஒரு மரபாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது!
இப்படி நம் அன்றாட வாழ்வில் ஆயிரம் செயல்கள் இருக்கின்றன! உதாரணமாக, எதுக்கு Good Morning, Take Care… லாம்? சொல்லலைனா எல்லாம் நாசமா போய்டுமா? இவையெல்லாம் அன்பு, மரியாதை, வாழ்த்து அல்லது பிரார்த்தனையின் வெளிப்பாடு! இது #கொரோனா விற்கு ஒரு தீர்வு என்றோ இதைச் செய்தே தீர வேண்டும் என்றோ யாரும் சொல்லவில்லை! மறுபடியும், ஆரம்ப வரிகளைப் படிக்கவும்.
நன்றிகள் 🤗🙏இயக்குநர் KS ரவிக்குமார்..!