September 20, 2024
  • September 20, 2024
Breaking News
December 31, 2023

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா டிரெயிலர் வெளியீட்டு விழா

By 0 148 Views

இயக்குநர் பிரபுராம்.செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நாயகன், நாயகியாக நடிப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இளமை துள்ளல் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து படத்தின் பாடல்கள் வெளியீட்டு குறித்து படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

மஹத் வடசென்னையைச் சேர்ந்த ஃப்ரீவீலிங் பையனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். வடசென்னை பையனாக மஹத் இந்தப் படத்தில் நடித்திருப்பது இந்தக் கதைக்கு கூடுதல் மைலேஜை சேர்த்திருக்கிறது. படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும் இதில் சில உணர்ச்சிகரமான தருணங்களும் இருக்கிறது.

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா மற்றும் மஹத்தின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்கள் மனதைக் கவரும் என்று படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 

இந்த திரைப்படத்தில் வில்லனாக ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனை ‘தங்கலான்’ சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி இந்தப் படத்தில் நிச்சயம் பேசப்படும். பாடல்களுக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.

பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. யோகிபாபு மற்றும் கரடியின் காதல் பாடல் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமைந்துள்ளது. 

மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருக்குமான ரொமான்ஸ் பாடல் நித்யஸ்ரீயின் குரலில் தரண் இசையில், கு. கார்த்திக் வரிகளில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.