வடபழனி காவேரி மருத்துவமனையில்
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்காக ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை ஆரம்பம்..!
சென்னை, 11 செப்டம்பர் 2025: -தென்னிந்தியாவின் முன்னணி பன்முக மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, நடமாடும் நுரையீரல் மருத்துவமனை’ எனும் புதுமையான முயற்சியைப் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. இது நீண்டகால நுரையீரல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ரோட்ராக்ட் கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் மற்றும் பே ஃபோர்ஜ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த முயற்சி, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நேரடியாக மேம்பட்ட நுரையீரல் பரிசோதனை வசதிகளை எடுத்துச் செல்லும்.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த நடமாடும் மருத்துவமனை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் முழுவதும் பயணித்து, மேம்பட்ட நுரையீரல் பரிசோதனை வசதிகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும். அடுத்த சில வாரங்களில், போரூர், பூந்தமல்லி, பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், காரைக்கால், பாண்டிச்சேரி, மேற்கு மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட 20 சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி செப்டம்பர் 2025 இறுதிக்குள் 35,000 – க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் இறப்புக்கான முதல் மூன்று காரணங்களில் சுவாச நோய்கள் உள்ளன. இருப்பினும் பெரும்பாலானவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மூலம் திறம்படக் கையாள முடியும். இந்தியாவில், நோய்களை தாமதமாகக் கண்டறிதல் ஒரு பெரிய சவாலாகத் தொடர்கிறது. பருவகால மாற்றங்கள், காற்றின் தரம் மாறுபடுவது, மற்றும் மாசுபாட்டுக்கு ஆளாகுதல் அதிகரித்து வருவதால், இந்த நடமாடும் மருத்துவமனை தொடங்கப்படுவது சமூகங்களுக்கும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் .
“ஆஸ்துமா, சிஓபிடி மற்றும் நுரையீரல் நோய் போன்ற சுவாச பிரச்சனைகள் பெரும்பாலான கண்டறியப்படாமலேயே இருக்கின்றன. அவை பெரும்பாலும் தீவிரமாக ஆன பின்பே கண்டறியப்படுகின்றன. ஆரம்பத்திலேயே கண்டறிதல் பல உயிர்களை காப்பாற்றுகிறது. அதேபோல, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்கும்,” என்று வடபழனி காவேரி மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகர் நுரையீரல் நிபுணர் டாக்டர் செல்வி சி கூறினார்.
காவேரி சுவாசப் பரிசோதனை – இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்துமா, நுரையீரல் செயலிழப்பு, இடைநிலை நுரையீரல் பிரச்சனை மற்றும் கோவிட்-க்குப் பிந்தைய சிக்கல்கள் போன்ற பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தும். புகைபிடிப்பவர்கள் மற்றும் தூசி, மாசுபாடு அல்லது உயிரி எரிபொருளுக்கு ஆளான நபர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள குழுக்கள் இந்த பரிசோதனைகளிலிருந்து குறிப்பாக பயனடைவார்கள். விவரிக்கப்படாத மூச்சுத் திணறல், தொடர்ச்சியான இருமல் அல்லது குறைந்த நுரையீரல் திறன் போன்ற சில மெல்லிய அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறிந்து உறுதி செய்வதால் சிகிச்சை அளிக்க உதவும்.
நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டல் பரிசோதனைகள், மூத்த நுரையீரல் நிபுணர்களுடன் நேரடி ஆலோசனைகள் மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துவது மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் உள்ளடக்கிய சிகிச்சைகள் வழங்கப்படும் . இந்த சேவைகளை இணைப்பதன் மூலம், மக்களின் வீட்டு வாசலிலேயே அவர்களுக்கு தேவைப்படும் சுவாச ஆரோக்கியத்திற்கு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது.
“காவேரி மருத்துவமனையைப் பொறுத்தவரை தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். காவேரி மூச்சுப் பரிசோதனை – நடமாடும் நுரையீரல் மருத்துவமனை, நீண்டகால நுரையீரல் நோய்களால் தவிர்க்கக்கூடிய மரணங்களை குறைக்க உதவுகிறது என்பதே ஒரு முன்னேற்றத்துக்கு முதல் படியாகும் ,” என்று காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.
இந்த துவக்க விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் தம்பி ராமையா பேசும்போது , “வடபழனி காவேரி மருத்துவமனை இதுபோன்ற பாராட்டக்கூடிய சிந்தனைமிக்க முன்னெடுப்பு எடுப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முன்னெடுப்புகள் நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்ல, குடும்பங்களை ஆரோக்கியமாகவும் நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் உதவும் .” என்று கூறினார்.
இம்முயற்சியானது வடபழனி காவேரி மருத்துவமனையின் நோக்கமான நோய்த்தடுப்பு மருத்துவம் மற்றும் சமூக ஆரோக்கியம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளது. உள்ளூர், அமைப்புகள், சமூகக் குழுக்கள் ஆகியவை காவேரி மருத்துவமனையின் காவேரி மூச்சுப் பரிசோதனை -இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை சேவையைத் தங்கள் பகுதியிலும் கொண்டு செல்ல அழைக்கவும்: 044 4000 6000.இதன்மூலம், தேவை உள்ள அனைவருக்கும் மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கும்.