October 5, 2024
  • October 5, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லாக் டவுனுக்கு பிறகு டப்பிங்கில் முந்திய கபடதாரி
May 12, 2020

லாக் டவுனுக்கு பிறகு டப்பிங்கில் முந்திய கபடதாரி

By 0 731 Views

திரை விமர்சகராக தேசிய விருது பெற்ற ஜி.தனஞ்செயன், ‘கொலைகாரன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட
பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில்
நடிக்கிறார்.

Kabadadhari dubbing startedவித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தன.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கி நேற்று (மே 11) பின்னணி வேலைகள் தொடங்கின. இதில் ’கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள் பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கின.

படத்தின் அனைத்து பின்னணி வேலைகளும் நிறைவு பெற்று விரைவில் படம் வெளியாக உள்ளது.

ஹேமந்த் ராவ் இப்படத்தின் கதை எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

Kabadadhari post production startedராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘கபடதாரி’ படத்தில் விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்கிறார்.

போஸ்ட் புரடக்ஷனில் முந்திக்கொண்டது போலவே வெளியீட்டிலும் வெற்றியிலும் முன்னிலை வகிக்கட்டும் ‘கபடதாரி..!’