April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்
August 24, 2019

நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்

By 0 649 Views

‘மோத்தி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலா’. மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர்  வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது,

விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர்  “ஜாகுவார் தங்கம் பேசியதிலிருந்து,

“கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்திக்கு  மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லி இருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவுசெய்து நல்லபழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படி கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய வேண்டும். இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும்…” 

இயக்குநர் மோத்தி.பா பேசியதிலிருந்து..

“இந்தக் கோலா படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி கூறும் விழா தான் இவ்விழா. இசை அமைப்பாளருக்கும் நடனத்தை சிறப்பாக அமைத்து தந்தவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மாஸ்டர் தருண் அவர்களுக்கும், மற்றும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. இந்தியாவின் அடையாளமான பாக்கியராஜ் அவர்களுக்கும் நன்றி..!” 

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதிலிருந்து..

“கோலா படத்தின் விழா நாயகன் மோத்தி.பா உள்பட அனைவருக்கும் பணிவான வணக்கம். இன்னொரு விழா நாயகன் இசை அமைப்பாளர். அவர் எங்க ஊருக்காரர் என்பதால் மிகவும் சந்தோசம். பாடலுக்கு சிறப்பாக நடனத்தை ராதிகா அமைத்துள்ளார். கேமராமேன் மிக சிறப்பாக பேசினார். எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது.

கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லாவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன். லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே..ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்றுதான் தோன்றியது.

புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம்தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். தருண் மாஸ்டர் நல்லா பன்றார் என்று என் படத்திற்கு கூப்பிட்டேன். என் ரூமை சுற்றி சுற்றி பார்த்தார். ஏன் என்று கேட்டதற்கு, “இல்லை எப்படியாவது இந்த ஆபிஸுக்கு வரவேண்டும் என்பது என்கனவு…” என்றார். அவர் தொழிலை தொழிலாக செய்யக்கூடியவர்.

தயாரிப்பாளர் போலீஸ்காரர் என்பதால் வாங்கிதான் பழக்கம் என்று நினைத்தேன்..ஆனால் இவர் எல்லாத்திற்கும் சம்பளத்தைச் சரியாக கொடுத்திருக்கிறார். போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால் இந்த ‘கோலா’ படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்..!”       

Kola Audio Launch

Kola Audio Launch