தனிநபர்பராமரிப்பிற்கான (பர்சனல்கேர்) தயாரிப்புகளுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான பிராண்டாக பெயர் பெற்றிருக்கும் ‘ஜுசி கெமிஸ்ட்ரி, சந்தையில் அதன் இருப்பை இன்னும் வலுப்படுத்த இப்போது முனைந்திருக்கிறது. காஸ்மாஸ் V3 தரநிலையின்படி எக்கோசெர்ட் (ஃபிரான்ஸ்) அமைப்பால் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் தயாரிப்புகளின் முழுத்தொகுப்பை இந்த பிராண்டு கொண்டிருக்கிறது.
கோயம்புத்தூரில் தனது விற்பனையகத்தை வெற்றிகரமாகத் தொடங்கி நடத்தி வருவதைத் தொடர்ந்து சென்னை மாநகரின் பிரபலமான பீனிக்ஸ் மார்ட் சிட்டி மாலில் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து தனது 2வது விற்பனையகத்தை இந்த பிராண்டு தொடங்குகிறது.
கோயம்புத்தூர், சென்னை மற்றும் அருகிலுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களின் ஆதரவே தனது முதல் விற்பனையகத்தின் வெற்றிக்கு காரணம் என்று கருதுகின்ற இந்தபிராண்டு, சென்னை மாநகர மக்களுக்கு பிரத்யேகமான சருமப்பராமரிப்பு அனுபவத்தை வழங்க முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
வாடிக்கையாளருக்கு முன்னுரிமையளிக்கும் இந்த பிராண்டு, தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் தொட்டு, உணர்ந்து பார்த்து தனித்துவமான பரிந்துரைகளைப் பெறுகின்ற மற்றும் இந்த பிராண்டின் தயாரிப்புகள் பற்றிய வரலாற்றைப் புரிந்து கொள்கின்றவாறு வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட ரீடெய்ல் அனுபவத்தின் முக்கியத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறது.
425 சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த விற்பனையகத்தில் இந்த பிராண்டு வழங்குகின்ற சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் மற்றும் இயற்கைத் தயாரிப்புகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பையும் பார்வையிட்டு, விளக்கங்கள் பெற்று இனிய அனுபவத்தைப் பெறமுடியும். சருமப்பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு மற்றும் உடல்பராமரிப்பு, அரோமாதெரபி, சிறார்களுக்கான பராமரிப்பு என பல்வேறு பிரிவுகளிலும், வகையினங்களிலும் இந்த பிராண்டின் தயாரிப்புகள் அனைத்தும் மிக அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தின் இணை – நிறுவனரும் மற்றும் தலைமை இயக்க அதிகாரியுமான மேகா ஆஷர், இவ்விற்பனையக தொடக்கம் பற்றி கூறியதாவது:
“எமது பல ஆண்டு கால முயற்சிகளின் பலனாக இந்த ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது. உண்மையில் சில காலத்திற்கு முன்பே இது நிகழ்ந்திருக்கவேண்டும். அதுமட்டுமன்றி, எங்களது நிறுவனத்தின் வேர்கள் இங்கு இருப்பதால் ஒரு இயற்கையான தேர்வாக சென்னை மாநகரம் இருக்கிறது.
இம்மாநகருக்கு நாங்கள் வருகை தந்த போதெல்லாம், கிடைத்த வரவேற்பும், அன்பும் எங்களை பிரமிக்கச் செய்திருக்கிறது. பெருந் தொற்றுக்குப் பிறகு, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து நம்மைச் சுற்றி உலகம் இயல்பு நிலைக்கு முழுமையாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ஜுசி கெமிஸ்ட்ரியின் அனுபவத்தை நேரில் அனுபவிக்க மக்களை வரவேற்பதற்கு இதுவே சரியான வாய்ப்பு என்று நாங்கள் கருதினோம்.
எமதுபிரதானவிற்பனையகத்தில்அனைவரையும்வரவேற்கநாங்கள்ஆவலோடுகாத்திருக்கிறோம்.”
இப்பிராந்தியத்தை அடித்தளமாக கொண்ட பிராண்டாக இருப்பதால், தென்னிந்தியா ஒரு முக்கியச் சந்தையாக இதற்கு இருந்து வருகிறது. இந்த சமூகத்தோடு இணைந்து செயலாற்றி, நுகர்வோரை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பதால், புதுமையான தயாரிப்புகளை வரவேற்க மற்றும் வாங்கிப்பயன்படுத்த தென்னிந்திய மாநிலங்கள் விரும்பி முன் வருகின்றன என்று இந்த பிராண்டு கருதுகிறது.
நகரமயமாக்கல் இம்மாநிலங்களில் அதிகமாக இருப்பதும் இந்த பிராண்டின் தயாரிப்புகளுக்குப் பொருத்தமான சந்தையாக இதனை ஆக்கியிருக்கிறது.
சென்னை மாநகரின் மையப்பகுதியில் பீனிக்ஸ் மார்கெட் சிட்டி அமைவிடத்தில் இந்த விற்பனையகம் அமைந்திருக்கிறது. காலை 10:30 முதல் இரவு 9:00 மணிவரை வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்க இது திறந்திருக்கும்.