சென்னை, 7 அக்டோபர் 2022: சென்னையின் பிரீமியம் மால்களில் ஒன்றான ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்விக்கும் வகையில், தி ஜூவல்லரி எக்ஸ்போ 2022 என்ற பிரம்மாண்டமான ஆபரண தங்கநகை கண்காட்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கண்காட்சி அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை, ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியின் கீழ் தரை தளத்தில், காலை 10.00 – இரவு 10.00 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் ஜுக்தி, ஸ்வா டைமண்ட்ஸ், மலபார் கோல்டு, ப்ளூ ஸ்டோன், ஸ்வரோவ்ஸ்கி, தனிஷ்க்கின் மியா, குஷால்ஸ், பெயோரா, எஸ்டெல், சலானி ஜூவல்லரி, கேஜே பெதர் டச் மற்றும் வில்வா ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற தங்க நகைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
தொடக்க விழாவை முன்னிட்டு, நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி, நடிகர் அபினய், நடிகை பவித்ரா லட்சுமி, மற்றும் நடிகர் நிரூப் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி பற்றி…
பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனம், சில்லறை வர்த்தகம் சார்ந்த மால்களை துவக்கி சொத்துக்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, இந்தியாவில் உள்ள மால்களில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ள பீனிக்ஸ் மால்களில் மக்கள் ஷாப்பிங் செய்வதற்கான அனைத்து பிராண்ட் நிறுவனங்களும், சாப்பிடுவதற்கான ஓட்டல்களும், பொழுது போக்குவதற்கான தியேட்டர்களும், பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. மும்பை, புனே, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் பீனிக்ஸ் மால்கள் உள்ளன.