January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 10 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடினார் ஜேசுதாஸ்
April 16, 2019

10 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடினார் ஜேசுதாஸ்

By 0 920 Views

2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இப்போது இளையராஜா இசையில் அமைந்த ‘தமிழரசன்’ படத்தில் ஒரு பாடலைப் பாட ஒத்துக்கொண்டு பாடியும் கொடுத்திருக்கிறார் என்பது படத்துக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாகியிருக்கிறது.

விஜய் ஆண்டனி நாயகனாகும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் இசைஞானி இசையமைக்கிறார். கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் புரட்சிகரமான பாடல் ஒன்று வருகிறது.

Jesudas is back

Jesudas is back

ஜெயராம் எழுதிய “பொறுத்தது போதும் பொங்கிட வேணும், புயலென வா…” என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் விரும்ப அவரிடம் கேட்டிருக்கிறார்கள். இடையில் பாடல்கள் பாடுவதைத் தவிர்த்து வந்த ஜேசுதாஸ் இந்தப் பாடலைப்பாட ஒத்துக்கொண்டு வந்து பாடிக்கொடுத்திருக்கிறார்.

‘தன்னிகரற்ற குரல் வளத்தால் சினிமாவில் அழிக்க முடியாத இடம் பெற்ற ஜேசுதாஸ் இந்தப் பாடலைப் பாடியது எங்களுக்குக் கிடைத்த மரியாதை’ என்பதாக மகிழ்கிறது படக்குழு.

முன்னதாக ஜேசுதாஸுக்கு பூங்கொத்து கொடுத்து இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் ஜி.சிவா ஆகியோர் வரவேற்றனர்..

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக நடந்து முடிவடைந்தது..!