July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயக்குனர் ஜனநாதன் இறந்த அதிர்ச்சியில் அவரது தங்கையும் மரணம்
March 18, 2021

இயக்குனர் ஜனநாதன் இறந்த அதிர்ச்சியில் அவரது தங்கையும் மரணம்

By 0 588 Views

லாபம் படத்தின் எடிட்டிங் வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் எதிர்பாராமல் மூளைச்சாவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அடுத்த இரு தினங்களில் அவர் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவரது மரணச் செய்தி கேட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த அவரது தங்கை லஷ்மி அண்ணனின் சடலத்தை பார்த்த இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார்.

அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணமடைந்தார்.

அண்ணனும் தங்கையும் அடுத்தடுத்து மரணம் அடைந்தது மேலும் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இருவரின் ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டுவோம்..!