July 4, 2025
  • July 4, 2025
Breaking News
April 10, 2020

சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா சீயான் விக்ரம்

By 0 843 Views

பிரபல நடிகர் விக்ரம் திரைத்துறையிலிருந்து விலகுவதாக மும்பை ஊடகம் தொடங்கி இங்குள்ள சில ஆன்லைனில் செய்தி வெளியானது.

இதற்கு பல மணி நேரம் கழித்து விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவி த்திருக்கிறது.      

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக தொடங்கி 30 வருட போராட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தவர் விக்ரம். கமலுக்கு அடுதது தன் உடலை கதா பாத்திரத்தில் பொறுத்த ரிஸ்க் எடுப்பதில் வல்லவரான இவர் தமிழில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர்.

இவர் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா படத்தில் 20 கெட்டப்புகளில் நடித்திருப்பதால் இந்த படமே தன் மனசுக்கு நிறைவாக இருப்பதாலும் இனி தன் மகனை சூப்பர் ஸ்டார் ஆக்க வேண்டும் என்று லட்சியம் எடுத்திருப்பதாலும் திரைத்துறையிலிருந்தே விலகுவதாக மும்பை ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

இதற்கு விக்ரம் தரப்பு  இன்றுுவரை மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் இருந்தது. இன்று திடீரென்று ” விக்ரம் நடிப்புக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

வைரஸ் தொற்று பாதிப்பால் மக்கள் பீதியடைந்துள்ள இச்சமயத்தில் இதுபோன்ற தவறான செய்தியை வெளியிடுவது பொறுப்பற்றத்தனம்…” என்று ஊடகங்களுக்கு செய்தி அனுப்பி இருக்கிறது விக்ரம் தரப்பு.

அடடே கொரோனா விழிப்புணர்வுக்கு கூட வாய் திறக்காதவர் இப்போதாவது வாய் திறந்தாரே… அதுவரை சந்தோஷம்தான்..!