October 16, 2025
  • October 16, 2025
Breaking News
June 25, 2020

கொரோனா சோகம் நெல்லை இருட்டுக்கடை அல்வா அதிபர் தற்கொலை

By 0 766 Views
நெல்லையில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங். வயது 76.
 
இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Iruttu kadai halwa
 
அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்டார். தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்ததும், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.