July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 வில் சர்ச்சை ஷாலு
December 18, 2019

இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 வில் சர்ச்சை ஷாலு

By 0 945 Views

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் தமிழ்ப்படங்களின் கண்னியத்தைக் குறைத்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்து மேற்படி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டத்திலிருக்கிறாராம்.

அதற்குத் தலைப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2’ என்றே வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நல்ல நிலைமையில் வளர்ந்து கொண்டிருந்த கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக்கி அவரை வாய்ப்பில்லாமல் மூலையில் உட்கார வைத்தவர், இந்தப்படத்துக்கு அதே ரேஞ்சில் பல ஹீரோக்களை ‘மூவ்’ செய்து முடியாமல் போக…

தானே ஹீரோவாக நடிக்கும் முடிவிலிருக்கிறாராம். முதல் படத்திலாவது ஹீரோ என்று ஒருவர் இருந்தார். இதில் ஹீரோவும் இவரே என்பதால் நடிகைகளும் உஷாராகி ஒதுங்கிக் கொள்ள பலவேறு கிளாமர் சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கி வரும் நடிகை ‘ஷாலு ஷமு’வை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

ஏற்கனவே ஒரு இயக்குநர் பற்றிய பாலியல் புகார் சொல்லியிருந்த ஷாலு, இப்போது நடிக்கவிருக்கும் இந்தப்படமே கொஞ்சம் ஒருமாதிரியான படமாக இருக்க, என்னென்ன சர்ச்சைகள் எப்படி எப்படியெல்லாம் வெடிக்கப்போகின்றனவோ…

இருட்டு அறைக்கே வெளிச்சம்..!