சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோருடன் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த வெற்றிக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் குற்றசாட்டுக்கு ஆளானதை அடுத்து டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மற்றொரு சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டிடிவி தினகரன் வெற்றி செல்லும் என்று அறிவித்ததுடன் சுயேட்சை வேட்பாளரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.