மலைவாழ் குடியை சேர்ந்த இந்த பெண் பெயர் சுனிதா. 12 ஆம் வகுப்பில் 98% பதிப்பெண் பெற்ற இவர் மேற்கொண்டு மருத்துவம் படிக்க தற்போது நீட் NEET தேர்வுக்கு தன்னை தயார் படுத்திவருகிறார்.
இவர் குடும்பம் வசிக்கும் மலை பகுதியில் மொபைல் நெட்ஒர்க் சிக்னல் கிடைப்பதில்லை. ஆன்லைனில் படிப்பதற்கு மொபைல் சிக்னல் கிடைக்க வேண்டும் இல்லையா?
அதனால் இவரது சகோதரர் அந்தப் பகுதியில் ஆராய்ந்துு ஒரு குன்றில், ஓரளவுக்கு சிக்னல் கிடைப்பதைை கண்டுபிடித்தார்.
அந்த இடத்தில், தன் சகோதரி படிக்க இந்த சிறிய குடிசையை அமைத்து கொடுத்துள்ளார். சுனிதா தினமும் இந்த குன்றின் மேல் ஏறி காலை 6மணி முதல் மாலை 6மணி வரை படித்து வருகிறார்.
அடாது பெய்த மழைக்கு இடையிலும் சுனிதா பயின்று வருவதை பார்க்கும் போது நெகிழ வைக்கிறது.
குன்றில் இட்ட விளக்கு ஊருக்கெல்லாம் ஒளி தருவதைப் போல் சுநிதாவும் தன் முயற்சியில் வெற்றி கண்டு பிரகாசித்து சமூகத்துக்கு நன்மை புரியட்டும்…
வாழ்த்துகள் சுனிதா..!