March 28, 2023
  • March 28, 2023
Breaking News
April 20, 2020

ஜிவி பிரகாஷ் சைந்தவிக்கு பெண் குழந்தை பிறந்தது

By 0 407 Views

தமிழின் தவிர்க்க இயலாத இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார்.

இப்போது நடிகராக ஜிவி பிரகாஷ் கையில் 12க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளராகவும் இரண்டு முக்கிய படங்களில் பணியாற்றி வருகிறார். அவற்றுள் ஒன்று சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று மற்றும் விஜய் இயக்கத்தில் அமையும் தலைவி

2013ஆம் ஆண்டு தன் பள்ளித்தோழி பாடகி சைந்தவியைத் திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் கடந்த அசுரன் படத்தில் சைந்தவி யை பாடவைத்து பதிவு செய்த ‘ எள்ளு வயல் பூக்கலையே ‘என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் சைந்தவி க்கு சென்னை கிளவுட் 9 மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

விஷயம் தெரிந்து திரையுலகினர் ஜிவி பிரகாஷ் குமார் சைந்தவிக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நாமும் வாழ்த்துவோம்..!