January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாகுபலி இசையமைப்பாளருக்கு எஸ்எஸ் ராஜமௌலி விடுத்த லாக் டவுன் சேலஞ்ச் வைரல் வீடியோ
April 21, 2020

பாகுபலி இசையமைப்பாளருக்கு எஸ்எஸ் ராஜமௌலி விடுத்த லாக் டவுன் சேலஞ்ச் வைரல் வீடியோ

By 0 681 Views

பாகுபலி 1 & 2 கொடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, இப்போ RRR படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் அந்தப் படம சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறதாம்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தயாராகி வரும் இந்த. RRR படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி உறுதி செய்திருக்கிறார்.

இவரைப் போன்ற பெரிய டைரக்டர் களெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் ஒரு சின்ன காபி கப்பை கூட எடுத்து வைக்க மாட்டார்கள். அதையும் உதவி இயக்குனர்கள் தான் செய்வார்கள்.

ஆனால் இந்த ராஜமௌலி சற்று வித்தியாசமானவர்.

இந்த லாக் டவுனி வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்காமல் இந்தியாவிலேயே உச்சத்தில் இருக்கும் இயக்குனராக இருந்தாலும், தனது வீட்டை சுத்தமாக கூட்டிப் பெருக்கி அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

அத்துடன் அவரது ஆஸ்தான இசை அமைப்பாளரான எம்.எம் கீரவாணியை சேலஞ்ச் செய்திருக்கிறார். எனவே அடுத்து கீரை வாணியும் இந்த செயலை செய்து இன்னொருவரை சேலஞ்ச் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ மிக வைரலாக பரவுகிறது.