July 13, 2025
  • July 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிகில் படத்துக்கு எதிராக பூ வியாபாரிகள் போர்க்கொடி வீடியோ
October 21, 2019

பிகில் படத்துக்கு எதிராக பூ வியாபாரிகள் போர்க்கொடி வீடியோ

By 0 922 Views
வரும் 25 ம் தேதி விஜய் நடித்த பிகில் வெளியாகிறது. இந்நிலையில் திருச்சி பூ வியாபாரிகள் பிகில் படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 
இது குறித்து திருச்சி ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர் சங்க செயலாளர் படையப்பா ரங்கராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…  
 
“பிகில்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது பூ வியாபாரிகளை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார்.
 
பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் செய்ய வைத்த போது அதில் தண்ணீர் தெளித்ததாக மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
 
மாவட்டம் தோறும் தலா ஒரு லட்சம் பூ வியாபாரிகள் உள்ளனர். இந்நிலையில் பூ வியாபாரிகள் மனம் புண்படும் வகையில் அவர் பேசியிருப்பது வியாபாரிகளை  வருத்தமடைய செய்துள்ளது. அவரது பேச்சை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
 
இல்லையென்றால் மாவட்டம் தோறும் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். பூ வியாபாரிகள் அனைவரும் திரைப்படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்..!” என கூறினார்.
 
அந்த வீடியோ கீழே…