August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவகார்த்திகேயனின் சீமராஜா பேர்வெல்லுக்கு 2 நாள்
June 17, 2018

சிவகார்த்திகேயனின் சீமராஜா பேர்வெல்லுக்கு 2 நாள்

By 0 1234 Views

சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ’24ஏஎம் ஸ்டூடியோஸ்’ ஆர்.டி.ராஜா தயாரிப்பில் அமைந்த ‘சீம ராஜா’ என்பது தெரிந்த விஷயம்தான். பொன்ராம் இயக்குவதால் இந்த வெற்றிக் கூட்டணிப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் இரண்டு நாள்களில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து ஜூன் 19-ம்தேதியன்று படப்பிடிப்பு முடிந்ததற்கான ஃபேர்வெல் விழா நடக்க இருக்கிறது.

சமந்தா, சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் படத்தில் கீர்த்தி சுரேஷும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது. காமெடிக்கு சூரி, இசைக்கு டி.இமான் இருக்கிறார்கள்.

முன்பே அறிவிக்கப்பட்டபடி படம் வினாயகர் சதுர்த்தி வெளியீடாக செப்டம்பர் 13ல் வெளியாகும் என்று மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சீம ராஜா ‘செம ராஜா’வாக வந்திருக்கும் என்று நம்பலாம்..!