January 22, 2025
  • January 22, 2025
Breaking News
April 24, 2019

கே.பாக்யராஜ் துப்பறியும் எனை சுடும் பனி

By 0 791 Views

‘டீ கடை பெஞ்ச்’ படத்தை இயக்கிய ராம்ஷேவா இப்போது எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘எனை சுடும் பனி’ படத்தை இயக்குகிறார்..

இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘டீ கடை பெஞ்ச்’ படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் கதா நாயகனாகிறார். கதா நாயகிகளாக உபாசனா ஆர்சி, சுமா பூஜாரி நடிக்க கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்…

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா. படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது. படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவா கூறியதிலிருந்து…

Enai sudum pani Pooja

Enai sudum pani Pooja

“சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார். வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன். இவர்களுக்குள் கிரைம் சம்பவம் ஒன்றும் அரங்கேறுகிறது. அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பது திரைக்கதை.

அந்த கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி சிக்கெடுத்து கண்டு பிடிக்கிறார் என்பதும் படத்தின் கூடுதல் சுவாரஸ்யம்.

படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது..!”