July 27, 2024
  • July 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கள்ளச் சந்தையில் மது விற்ற திரௌபதி துணை நடிகர் கைது
April 19, 2020

கள்ளச் சந்தையில் மது விற்ற திரௌபதி துணை நடிகர் கைது

By 0 679 Views

கொரோனா காரணமாக நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது.

ஆனாலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருது. எனவே சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தெற்கு இணை ஆணையர் மகேஷ்வரி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்ட திரெளபதி பட துணை நடிகர் ரிஸ்வான் (30) என்பவரை போலிசார் கைது செய்தார்கள்.

அவர் வீட்டில் இருந்து 57 குவார்ட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

Draupathi artist arrested

அவர் அளித்த தகவலின்படி சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா புரொடக்‌ஷன் வேலை பார்க்கும் பிரதீப் (31) மற்றும் அவரது வாகன ஓட்டுனரான சூளைமேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் (41) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் தேவராஜ் காரில் பதுக்கி வைத்து இருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், 20,000 பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

திரௌபதி உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்த துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சினிமா துறை யில் உள்ள தனது நண்பர்களுக்கு ரூ.1200க்கு விலை பேசி அதை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று சப்ளை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துருக்கிறது.

வாங்கியவர்களையும் பிடித்தால்தான் சரி..!