April 23, 2024
  • April 23, 2024
Breaking News
April 19, 2020

டிரெண்டிங் ஆகும் மகிமா நம்பியார் ஆட்டம் வீடியோ

By 0 690 Views

கோலிவுட்டில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த இளம் நாயகிகளுள் ஒருவர் நடிகை மஹிமா நம்பியார்.

2012-ம் வரு டம் சாட்டை படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து குற்றம் 23, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மகாமுனி திரைப்படம் இவருக்கு சிறந்த பெயரை பெற்றுத்தர விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் .

எப்போதும் ஸ்லிம்மாக, ஆக்டிவாக இருப்பதெப்படி? என்ற கேள்விக்கு மகிமா தந்த விளக்கம்…

“இதுக்குக் காரணம் என் ஃபுட் ஹேபிட்-தான்னு சொல்லணும்… சின்ன வயசில் நான் சரியாவே சாப்பிட மாட்டேன்னு அம்மா சொல்லுவாங்க. அதனாலேயே அம்மா என்னை கட்டாயப்படுத்தி தான் சாப்பிட வைப்பாங்க. எனக்கு பிடிச்ச சாப்பாட்டை பார்த்து பார்த்து சமைச்சு தருவாங்க. அப்ப நான் காரசாரமான உணவு எல்லாம் ரொம்ப சாப்பிட மாட்டேன்.

சாப்பாட்டில் பால், சர்க்கரை போட்டு கலந்து, அதில் வாழைப்பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக போட்டு உடன், நிறைய நட்ஸ், உலர்ந்த திராட்சை எல்லாம் போட்டு தருவாங்க. அப்படி சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு பெயர் எல்லாம் கிடையாது. எனக்கு பிடிக்கும்ன்னு அம்மா செய்து தருவாங்க. இப்பக்கூட அம்மாக்கிட்ட அந்த சாப்பாட்டை செய்து தரச்சொல்லி சாப்பிடுவேன்.

அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க சமைக்கிற எல்லா உணவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் கேரளாவில் மாம்பழம் போட்டு ஒரு குழம்பு வைப்பாங்க. மாம்பழ கூட்டான்’னு சொல்லுவாங்க.

இனிப்பு, காரம், புளிப்பு கலந்து இருக்கும். பொதுவா மோர் குழும்பில் தான் தயிர் சேர்ப்பாங்க. ஆனா இந்த மாம்பழக் குழம்பிலும் அம்மா தயிர் சேர்த்து செய்வாங்க. மாம்பழம் சின்னச் சின்ன துண்டா வேற இருக்கும்.

சாப்பாட்டுக்கு சேர்த்து சாப்பிடும் போது ரொம்ப நல்லா இருக்கும். அதை சாப்பாட்டிலும் போட்டு சாப்பிடுவேன். தனியாவும் ஒரு கப்பில் வச்சு சாப்பிடுவேன். வீட்டில் விசேஷம், இல்லைன்னா என்னோட பிறந்தநாள்ன்னா அம்மா அதை கண்டிப்பா செய்வாங்க. விசேஷ நாட்களில் மாம்பழ குழம்பு எங்க வீட்டில் இல்லாமல் இருக்காது…’’ என்றவருக்கு சமையல் செய்வது பிடித்தமான விஷயமாம்.

‘‘நான் அளவோடுதான் சாப்பிடுவேன். ஆனா எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும். ஆனால் அம்மா என்னை சமையல் அறை பக்கமே விடமாட்டாங்க. ஒரு முறை நான் சமைக்கிறேன்னு என் கையில சூடு பட்டுவிட்டது. அந்த தழும்பு இன்னும் இருக்கு.

அதனாலேயே அம்மா கொஞ்சம் பயப்படுவாங்க. நான் சமையல் அறைக்குள் போனாலே அம்மா டென்ஷனாயிடுவாங்க. அதனால நான் சமைக்க மாட்டேன்.

ஆனா அம்மா கூட இருந்து அவங்க எப்படி செய்றாங்கன்னு பார்த்துக் கொண்டு இருப்பேன். அம்மா சமைப்பதை வேடிக்கை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் சென்னைக்கு நான் ஷூட்டிங் போது தான் வருவேன். அப்படி வரும் போது, இங்க சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு உணவகம் இருக்கு. அங்க சைவ உணவு தான் இருக்கும். அதுவும் எல்லாமே டயட் சாப்பாடு சாப்பிடறவங்களுக்காகவே இயங்கும் பிரத்யேகமான உணவகம். என்னோட ஃபிரண்ட் சொல்லிதான் இங்க போய் சாப்பிட்டேன்.

இப்ப என்னோட ஃபேவரெட் உணவகமா மாறிடுச்சு. எப்ப சென்னை வந்தாலும் இங்க போய் சாப்பிடாம இருக்க மாட்டேன்.

டயட் சாப்பிடும் போது நிறைய வெரைட்டி இருக்காது. ஆனா அங்க நிறைய இருக்கும். தர்பூசணி சட்னி, ஆஸ்பராகஸ் சூப், ஆஸ்பராகஸ் வெள்ளரி ரோல், ஆக்டிவேடெட் சார்கோல், தேங்காய் மில்க்‌ஷேக்னு நாம நினைச்சு பார்க்க முடியாத வெரைட்டி எல்லாம் அங்க இருக்கும்.

ஷூட்டிங் வரும் போது, இங்க சேட்டா கடைன்னுதான் சொல்வாங்க. அங்க இருந்து தான் எனக்கு சாப்பாடு வரும். அது சின்ன மெஸ் மாதிரி. அது எங்கேன்னு தெரியாது. அங்க மீன் வறுவல் ரொம்ப நல்லா இருக்கும். கேரளாவை விட இங்க ரொம்ப நல்லா இருக்கும்…” பொரிந்து தள்ளினார் மாா

இப்போது இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, நடனம் பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த மஹிமா செல்லம் ஆடற டேன்ஸ் மினி க்ளிப் ஒண்ணு ஆன் லைனில் ட்ரெண்டிங் ஆகிறது. அந்த வீடியோ கீழே…