திவ்யா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தற்போதைய எனது நோக்கம் ஏழைக் குழந்தைகளின் ஆரோக்கியம் மீதுதான் இருக்கிறது என்றார்.
தற்போது தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ‘சி’ போதுமானதாக இல்லை, அதை அதிகப்படுத்த வேண்டும் என்று அதற்கான ஆய்வில் ஈடுப்பட்டு வருகிறார். தனது ஆராய்ச்சி மூலம் 12-லிருந்து 23 மாதக் குழந்தைகளுக்கு 62 சதவிகிதம் மட்டும்தான் தடுப்பூசி போடப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், அரசு பள்ளி மாணவர்களில் 40 சதவிகிதம் பெண் குழந்தைகளுக்கும் 38.4 சதவிகித ஆண் குழந்தைகளுக்கும் இரும்பு சத்து குறைபாடு உள்ளது. எனவே அவற்றை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு பற்றியும், மருத்துவத்துறை முறைகேடுகள் பற்றியும் பிரதமருக்கு திவ்யா எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் ஒரு கட்டத்தில் வைரலானது தெரிந்திருக்கும். அதனால் அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டா, அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த திவ்யா சத்தியராஜ், “நான் கண்டிப்பாக விரைவில் அரசியலுக்கு வருவேன். அதற்கான அறிவிப்பு முறைப்படி வரும்..!’ என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, “ரஜினி, கமல் ஆகியோர் கட்சிகளிலோ, வ3எறு கட்சிகளிலோ சேரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா..?” என்ற கேள்விக்கு தனக்கு கம்யூனிசம் பேசும் நல்லகண்ணு அய்யாவை மிகவும் பிடிக்கும் என்றும், சாதிய கட்சிகளிள் சேர மாட்டேன் என்றும் கூறினார்.
ரஜினி அங்கிளையும், கமல் அங்கிளையும் நடிகர்களாக தான் எனக்கு பிடிக்கும். எனவே கண்டிப்பாக அவர்களின் கட்சிகளில் சேரவே மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்த திவ்யா, தனது அரசியல் பாதை புதியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். விரைவிலேயே அவர் அரசியலுக்கு வருவாராம்.
அமைதிப்படை ரெடி ஆகுதோ..?