October 15, 2025
  • October 15, 2025
Breaking News
March 30, 2018

நடிப்பதற்கு நேரமில்லை – திவ்யா சத்யராஜ்

By 0 1097 Views

சத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது.

இப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக தன் செய்தியாளர் மூலம் ஊடகங்களுக்கு மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா.

“இயக்குநர் வடிவேல் அப்பாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறாரே அன்றி என்னை நடிக்க வைக்க அல்ல. எனக்கு என் ‘க்ளினிக்’கிலேயே இரவு 9 மணி வரை வேலை இருக்க, நான் நடிபது சாத்தியமேயில்லை..!” என்று மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா.

திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், இந்தச்செய்திக்கு அவர் அனுப்பி இருக்கும் புகைப்படம் போட்டோ ஷூட் நடத்தி எடுக்கப்பட்டது போல் இருக்கிறது.

இருக்கலாம். நடிகர் வீட்டு நிபுணர் ஆயிற்றே… அப்படித்தான் புகைப்படங்கள் வரும்..!