September 23, 2023
  • September 23, 2023
Breaking News
February 25, 2020

இன்னொரு இயக்குநரும் கபடதாரி படத்தில் நடிகரானார்

By 0 693 Views

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவின் அடுத்த அதிரடி அறிவிப்பாக ‘சத்யா’ பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகாராக அறிமுகமாகிறார் என்று வெளியிடப்பட்டுள்ளது.

Creative Entertainers and Distributors சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது…

“கபடதாரி” எங்கள் அனைவரின்  மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப்பெரும் உற்சாகத்தை அள்ளித்தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத்திறமையையும் கொட்டி தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்திற்கு நல்ல உடல்கட்டுடன், ஸ்டைலீஷ் லுக்கில் இருக்கக்கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து  பலரை மனதில் கொண்டு,  யாரை நடிக்க வைக்கலாம் என விவாதித்தோம். இறுதியாக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தக்கதாப்பாத்திரத்தை அருமையாக கையாள்வார் என எனக்கு தோன்றியது. ஆனால் அவர் அரிதாரம் பூச சம்மதிக்கவில்லை. பெரும் வற்புறுத்தலுக்கு பின் எங்கள் மீதான அன்பில் அவர் ஒத்துக்கொண்டார். அவருடைய கதாப்பாத்திரம் கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கிய பாத்திரம் ஆகும். படத்தில் மிக அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக  அந்த கதாப்பாத்திரம் இருக்கும். இப்படத்திற்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வருவார் என எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ்,J சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் K கிங் இசையமைக்கிறார்.  ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K L படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில்  வரும்  2020 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.