February 17, 2026
  • February 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இதயம் துடித்துக் கொண்டிருக்கும் இயக்குனரை கொன்றுவிடாதீர்கள் – தயாரிப்பாளர் வேண்டுகோள்
December 23, 2020

இதயம் துடித்துக் கொண்டிருக்கும் இயக்குனரை கொன்றுவிடாதீர்கள் – தயாரிப்பாளர் வேண்டுகோள்

By 0 560 Views

கடந்த 2015-ம் ஆண்டு கரி என்கிற படத்தை இயக்கி மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் ஷாநவாஸ். அதிதி ராவ் நடிப்பில் உருவான ‘ சுஃபியும் சுஜாதயும்’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தை இயக்கியது ஷாநவாஸ் என்பதால் அவருக்கு மேலும் புகழ் கூடியது.

இந்நிலையில், காந்திராஜன் என்ற படப்பிடிப்பில் இயக்குநர் ஷாநவாஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் இன்று காலமானார் என்று செய்தி பரவியது. நிலையில் ‘சூஃபியும் சுஜாதயும்’ தயாரிப்பாளர் விஜய் பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஷாநவாஸ் வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார். அவரது இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அற்புதம் நடக்கும் என்று நம்புவோம். தவறான தகவல்களை பகிரவேண்டாம்….’ (https://www.facebook.com/Vijaybabuofficial/posts/1971064219724576

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஷாநவாஸ் மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்…