September 3, 2025
  • September 3, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அப்பாவி தயாரிப்பாளர்களை ஏமாற்றும் சுனில் ஜெயின் மீது போலீஸில் மோசடி புகார்
February 15, 2020

அப்பாவி தயாரிப்பாளர்களை ஏமாற்றும் சுனில் ஜெயின் மீது போலீஸில் மோசடி புகார்

By 0 577 Views

திரைப்பட தயாரிப்பாளர்களின் அப்பாவித் தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பினாமி சுரபி மோகன் என்பவர் மூலம், பல திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை வலுக்கட்டாயமாக அபகரித்து, ஏமாற்றி வந்த சுனில் ஜெயின் மீதும், சுரபி மோகன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ‘வா டீல்’, ‘காவியன்’, ‘ஐங்கரன்’, ‘1945’ ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் கமிஷனர் அலுவலகத்தில் ‘1945’ தயாரிப்பாளர் ராஜராஜன் சுனில் ஜெயின் மீது மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி புகார் மனு கொடுத்துள்ளார்.

மற்ற தயாரிப்பாளர்களும் , கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளனர்.

பல புகார்கள் குவிந்ததால் சுனில் ஜெயின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று ஏமாந்த தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர் .