தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமிடையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை இருக்கிறதல்லவா..? இந்த நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையின் மூலத்தைச் சுருக்கி அதுவே ஒரு கேணித் தண்ணீர்ப்பிரச்சினையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறார் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். கேரளத்துக்காரரான இவர் இயக்கினால் படம் கேரளாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். மனசாட்சியுள்ள மனிதரான நிஷாத் அப்படி...
கடைசிப் பக்கம் கிழிந்த நாவலுக்கு ஒரு பரபரப்புண்டு… கிளர்ச்சியுண்டு…கடைசியில் என்னதான் நடந்திருக்கும்..? என்கிற எதிர்பார்ப்பு அடங்கமறுக்கும் அலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். இந்த உணர்வை அடிநாதமாக வைத்து ஒரு ‘ஆந்தாலஜி’ கேப்ஸ்யூலுக்குள் ஆறு கதைகளை… அதுவும் ‘ஹாரர்’களைப் படைத்திருக்கிறார்கள். உலகெங்கும் ‘ஆந்தாலஜி’ எங்கிற தொகுப்புத் திரை வடிவம் எதிர்பார்ப்பைவிட குறைவான வெற்றியையே தந்திருக்க, அதை வைத்து...
‘ரெட்ஜயன்ட்’ தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக, சீனுராமசாமி இயக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. வேலைநிறுத்தத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டக் களிப்பில் இருக்கும் சீனு ராமசாமிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கிறது. படத்தில் உதயநிதியின் ஜோடியாக நடித்திருக்கும் தமன்னா இயக்குநர் சீனு ராமசாமியைக் குறித்து வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரம்தான் அந்த மகிழ்ச்சிக்குக்...
சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்ததன் அடிப்படையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் டெல்லி...
அரசியல் களமிறங்கும் ரஜினி இங்கே தனது மக்கள் மன்றத்துக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளை முடுக்கிவிட்டு தன் உள்ளத்தைத் தூய்மை செய்து கொள்வதற்காக இமயமலை சென்றிருக்கிறார். இந்தப் பயணத்தின் குறுக்கே அரசியல் பேசுவதில்லை என்று அவர் உறுதி கொண்டிருந்தாலும் அவரை யாரும் விடுவதாயில்லை. இந்த ஆன்மிகப் பயணம் முடிந்தபின் அவர் முழு உடல் தகுதி பரிசோதனைகளுக்காக...