பொல்லாதவன் படத்துக்குப் பின் ஒரு மோட்டார் பைக்கை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார்...
திரையுலகில் நடிக நடிகையருக்கு சில கொள்கைகள் இருக்கும். உதாரணத்துக்கு ராஜ்கிரண் எத்தனைக் கோடிகள் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டார். அதேபோல் தேவயானியும் அம்மா, மாமியார் ரோல்களை ஏற்பதில்லை என்று உறுதியுடன் இருந்து அப்படி வந்த பல வேடங்களை ஒதுக்கி வந்தார். இப்போது முதல்முறையாக தன் கொள்கையைத் தளர்த்திக் கொண்டிருக்கிறார் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்துக்காக. இதில்...
ஒரு வெளிநாட்டுக்காரரிடம் நம்ம ஊர் ஃபுல் மீல்ஸை வைத்தால் அவர் எப்படி சாப்பிடுவார்..? ரசத்தை முதலில் ஊற்றி சாப்பிட்டு விட்டு பிறகு மோர்சாதம், சாம்பார் சாதம் என்று சாப்பிடக்கூடும் இல்லையா..? அப்படிதான் ஆகிறது நம்ம ஊருக்குக் கதை எழுதும்போது ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை எழுதினால். அப்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் பயின்று அமெரிக்கப் படங்கள்...
ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளி கொண்டாட சில உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு அபாயகரமான தொழிலாக இருக்கிறது பட்டாசு தயாரிக்கும் தொழில். அப்படி இன்று காலை சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்க, உள்ளே இருந்த தொழிலாளர்கள்...
அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி விமான நிலையத்தில் இன்று (07-09-2018) பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதிலிருந்து… குட்கா ஊழல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், “எங்களுக்கு மடியில் கனமில்லை… வழியில் பயமில்லை…” என்று கூறியிருக்கிறார். இது ஆரம்ப கட்ட விசாரணை என்பதால் அவர்...
இந்த நாகரிக உலகில்கூட இன்னும் தமிழ்நாட்டளவில் விரவிக் கிடக்கும் சாதீய உணர்வுகளையும், அதன் காரணமாக காதலில் விளையும் ஆணவப் படுகொலைகளையும் அப்பட்டமாக சுட்டிக் காட்டும் படம். அதிலும் நாம் சமீப காலங்களில் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஆணவக் கொலைக்கு ஆளான காதல்களைக் கோர்த்து ஒரு திரைக்கதையை எழுதி பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ்....