இயக்குனர் மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் தனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு...
நாயகன் எடுத்த காலத்திலிருந்தே ‘இது காட்ஃபாதரின் காப்பி’ என்று மணிரத்னம் மீது குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. அப்போதெல்லாம் வெளிநாட்டுப் படங்களை பார்க்கும் பழக்கமும், பாக்கியமும் நமக்கு அரிதானது என்பதால் பார்த்ததாகச் சொல்பவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டிருந்தோம். இன்றைக்கு அப்படியில்லை. விரல் நுனியில் உலக சினிமாக்கள் அணிவகுக்கும் நிலை… யாரும் யாரையும் ஏமாற்ற முடியாத சூழலில்...
‘நோட்டா’ படத்தில் ‘விஜய் தேவரகொண்டா’வை தமிழுக்கு அறிமுகப்படுத்த நினைத்த காரணத்தைக் கேட்டபோது இயக்குநர் ஆனந்த் சங்கர் கூறியது… “நோட்டா’ ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது. காரணம் இதில் ஹீரோவைத்தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அப்போதுதான் தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என வெரைட்டியான படங்களின் மூலம்...
திரையிட்ட இடங்களிலெல்லாம் பரியேறும் பெருமாள்’ வெற்றிக்குதிரையில் ஏறி பவனி வந்து கொண்டிருக்கிறது. படத்தின் நாயகன் கதிர் மீது ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ படங்களுக்குப் பின் நம்பிக்கையும் கூடியிருக்கிறது. படம் பற்றிப் பேசினார் கதிர். “பரியேறும் பெருமாள்’ என்னைத் தேடி வந்த வாய்ப்பல்ல. நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக...
‘யாஷ் ராஜ்’ என்றாலே பிரமாண்டம். இப்போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஆக்ஷன், அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ . இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ‘கத்ரீனா கைப்’ மற்றும் ‘பாத்திமா சனா சேக்’ ஆகியோர்...