லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார் திருமதி. வி. வடிவம்மாள், திரு லக்ஷ்மண்,...
தமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார். காதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான். வயது தொட்டோ, வர்க்கம் தொட்டோ காதலின்...
‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் மூடர்கூடம் நவீன் இயக்க விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே நடித்திருக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஷாலினி பாண்டே இதில் நடித்துள்ள வேடத்தில் இப்போது நடித்து வருபவர் அக்ஷரா ஹாசன். ஏன் இந்த நாயகி மாற்றம்..? இதற்கு தயாரிப்பாளர் டி. சிவா...
நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது. இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும்...
ஸ்மைலீ உள்பட எதையும் விடாமல் காப்பி அடித்து படம் எடுக்கக் கூடியவர் அட்லீ என்பது ரசிகர்களும், விமர்சகர்களும் புரிந்து கொண்டிருக்கும் விஷயம். சமீபத்தில் விஜய் நடித்து அவரது இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் எந்தெந்த சீன்கள் எங்கெங்கிருந்து உருவப்பட்டன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டுமல்லாது அந்த சீன்களையும் பிடித்து அப்படியே வெளியிட்டு அட்லீயை...
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் இன்று (22nd Dec, Sun) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர்...