சஸ்பென்ஸ் வைக்காமல் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நாளை மறுநாள் (02-08-2019) வெளியாகவிருக்கும் ‘தொரட்டி’ படம் நன்றாக இருக்கிறது…’ நிற்க… (உட்கார்ந்தாலும் கவனிக்க…) இந்த ‘நன்றாக இருக்கிறது…’ என்ற இரண்டு வார்த்தைகளை அவரவர் புரிந்து கொள்ளும் தன்மையே வேறு. அதனால், எப்படி ‘நன்றாக இருக்கிறது’ என்று புரிய வைக்க முயல்கிறேன். ‘மெர்சல்’ படம் நன்றாக இருக்கிறது என்பதற்கும்,...
‘பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…’ என்ற வாக்குக்கு ஏற்ப வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டு அடுத்தடுத்து பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அதர்வாவை வைத்து வெற்றிப்படமான ‘பூமராங்’ கொடுத்துவிட்டு அடுத்த படத்தையும் அவரை வைத்தே இயக்குகிறார். அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று (29-07-2019)...
இயக்குநர் சரணின் திறமை பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தை வடிவமைப்பதிலும், சரியான கலைஞர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் அவரது புத்திசாலித்தனம் அதிக அலங்காரங்களை படத்துக்கு சேர்க்கிறது. இதில் அவர் இப்போது இயக்கி வரும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படமும் இணைகிறது. ஆரவ்வின் கவர்ச்சிகரமான ஆளுமை, அவருக்கு...
தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது, தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் ‘பட்டாஸ்’ எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34’ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தோம். ‘தனுஷ் ரசிகர்கள்’ என்று...