September 19, 2024
  • September 19, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

விஜய் சர்கார் அமைத்தாரா இல்லையா – விமர்சனப் பார்வை

by by Nov 7, 2018 0

ஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள்… இது அதில் ஒரு வகை.

இந்தப் படத்தைப் பார்த்தபோது மூன்று கேள்விகள் எழுந்தன.

1.ஒரு மாநில முதல்வராக இத்தனை எளிதாக முயற்சி செய்தால் போதுமானதா..?
அல்லது
2. சினிமாக்காரர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதானா..?
அல்லது
3. ரசிகர்களால் இவ்வளவு மலிவாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று ரசிகர்களின் அறிவை மட்டமாக நினைத்து இப்படி படமெடுக்கிறார்களா..?

ஏற்கனவே கே.பாக்யராஜ் விலாவாரியாக சொல்லி அரவக்குறிச்சி முதல் அன்டார்டிகா வரை சர்கார் கதை அத்துப்படி ஆகிவிட்டதால்…

Read More

வன்முறை பகுதி படத்தின் விமர்சனம்

by by Nov 1, 2018 0

படத்தின் தலைப்பையும், இதற்கான புகைப்படங்களையும் பார்த்துவிட்டு “இந்தப்படத்துக்கெல்லாம் விமர்சனம் அவசியமா..?” என்ற கேள்வி எழலாம். படம் பார்க்கும்வரை அதே நினைப்புதான் இருந்தது. ஆனால், பார்த்து முடித்தவுடன் ஏற்பட்ட விளைவு வேறு… மேலே படியுங்கள்..!

படம் எப்படிப்பட்டது என்று தலைப்பிலேயே ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு…’ என்று வீச்சரிவாள் வீசியதைப் போல சொல்லி விட்டார் இயக்குநர் ‘நாகா’ என்கிற நாகராஜ். (நாகா என்ற பெயரிலும் நாகராஜ் (தினந்தோறும்) என்ற பெயரிலும் ஏற்கனவே இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் வேறு……

Read More

ஜீனியஸ் விமர்சனம்

by by Oct 30, 2018 0

‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ பார்க்கும்போது மகன் வீராட் கோலி ஆக வேண்டும் என்றும், விஜய் டிவி பார்த்து “என் மகன் சூப்பர் சிங்கரா ஆகணும்…” என்றும், அடுத்த வீட்டுப் பையன் அமெரிக்காவில் செட்டில் ஆனதைக் கேட்டு என் பிள்ளை ஆஸ்திரேலியாவில் ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்றும் அதற்கான அத்தனை முயற்சிகளிலும் இறங்குபவரா நீங்கள்..?

உங்களுக்காகத்தான் இந்தப் படம். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் பெற்றோர் இந்த ரகம்தான். ஆக, ஒட்டுமொத்த பெற்றோருக்கான ஒரு பாடம்தான் இந்தப்படம்.

அறிவாளியான குழந்தையைப் பெற்றவர்கள் அந்த…

Read More

சண்டக்கோழி 2 திரைப்பட விமர்சனம்

by by Oct 18, 2018 0

இது இரண்டாம் பாகங்களின் சீசன் என்பதால் தங்கள் பங்குக்கு இயக்குநர் லிங்குசாமியும், விஷாலும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள், தங்களது வெற்றிப்படைப்பான சண்டக்கோழியின் இரண்டாம் பாகத்தில்.

முதல் பாகம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து வெளியாகும் இரண்டாவது பாகப் படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். காரணம் முதல் பாகம் ஒரு ஆக்‌ஷன் படம் எப்படி இருக்க வேண்டுமோ அதன் முழுத்தன்மையுடன் வெளியாகி பாராட்ட வைத்தது. 

இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்றால் “ஆமாம்…” என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால்,…

Read More

எழுமின் விமர்சனம்

by by Oct 17, 2018 0

உலக அளவிலேயே குழந்தைகளுக்கு நம் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கும் ஒரு விஷயம், ‘துன்பம் நேர்கையில் ஒரு ஹீரோ வந்து நம்மைக் காப்பார்…’ என்பதுதான். ஆனால், அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு, ‘குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் ஹீரோக்கள்தான்…’ என்று முதல் குரலெடுத்து உரக்கச் சொல்கிறது இந்தப்படம்.

விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டிருக்கும் படத்தில் அப்துல்கலாமின் அறிவுரைகளும் இடம்பெறுவதுடன் குழந்தைகளுக்கு ‘குட் ஹேபிட்’, ‘பேட் ஹேபிட்’ என்று சொல்லித்தந்து கொண்டிருந்த நாம் இன்று ‘குட் டச்,…

Read More

கூத்தன் விமர்சனம்

by by Oct 13, 2018 0

பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவர் தன் படத்துக்குப் போட்ட ஒரு ஏரியா செட்டை அப்படியே துணை நடிகர்களுக்குக் குடியிருக்க விட்டுவிட்டுப்போக, அந்த சினிமா நகரில் வசிக்கும் அத்தனைக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்கிற படம். கூடவே நடனத்தின் பெருமையையும் இன்னொரு பக்கம் சொல்லி இரண்டையும் முடிச்சுப் போட்டு ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.வெங்கி.

32 டேக் வாங்கும் துணை நடிகை என்று பெயரெடுத்த ஊர்வசியின் மகன் ராஜ்குமார்தான் படத்தின் ஹீரோ. அவருக்கு நடனமாட ஆசை. ஆனால், முறையாக நடனம்…

Read More

மனுசங்கடா விமர்சனம்

by by Oct 12, 2018 0

வாழும்போதுதான் சாதிகள் மனிதர்களைப் பிரிக்கிறது. இறந்த பிறகாவது சமரசம் உலாவுமிடத்துக்குப் போகலாம் என்றால் அதற்காவது முடிகிறதா என்பதுதான் கேள்வி.

அரசு, சட்டம், நீதி எல்லாமே மனிதர்களுக்குப் பொதுவானவை என்பது வெறும் ஏட்டளவில்தான் என்பதுடன், நீதி மன்ற உத்தரவு கூட வெறும் வெள்ளைக் காகிதம்தான் என்று புரிய வைத்திருக்கும் இந்தப்படத்தை அம்ஷன் குமார் இயக்கியிருக்கிறார்.

படத்தில் நாயகனாக வரும் ராஜீவ் ஆனந்த் அயர்ந்து உறங்கும் விடிகாலைப் பொழுதில் அவரது அப்பா இறந்த செய்தி வருகிறது. நகரத்திலிருந்து நான்கு மணிநேரத்தில் சென்று…

Read More

ஆண் தேவதை சினிமா விமர்சனம்

by by Oct 11, 2018 0

ஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா.

உலகத்தில் இப்படி நிறைய ஆண்தேவதைகள் இன்றைக்கும் வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அவர்களே வெளியில் சொல்ல வெட்கப்படும் சமுதாயச் சூழலில் அதை இலக்கியமாக்கிப் பெருமைப்படுத்தியதற்காக ஆண்களின்…

Read More

நோட்டா படத்தின் விமர்சனம்

by by Oct 6, 2018 0

அரசியல் நையாண்டிப் படங்களை சினிமா ரசிகர்கள் எபோதுமே அன்லிமிட்டட் மீல்ஸ் ஆக விரும்பிச் சுவைப்பார்கள். அதிலும் நடப்பு அரசியலை ஒரு பிடி பிடித்தால் அது அன்லிமிட்டட் ஆம்பூர் பிரியாணியாகவே ஆகிவிடும். அப்படி ஒரு அரசியல் சட்டயர் கொண்டு ரங்கராட்டினம் சுற்றியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.

படத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம் தெலுங்குப் படவுலகின் ‘ஹாட் ஸ்டார்’ விஜய் தேவரகொண்டாவைத் தமிழ் ஹீரோவாக இந்தப்படத்தில் பட்டம் சூட்டியிருப்பது. அந்த வகையிலும் குறிப்பிடத் தகுந்த படமாக மாறிவிட்டது நோட்டா.

ஹீரோவாக இருந்து…

Read More

96 படத்தின் திரை விமர்சனக் கண்ணோட்டம்

by by Oct 2, 2018 0

இப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொண்டாடி எழுதிய விமர்சனத்துக்காக நிமிடத்துக்கொரு வாழ்த்துக்களில் திணறி ‘புரையேறும் பெருமாளாக’ ஆகிவிட்டிருந்தேன். அதற்காக உச்சந்தலையில் தட்டி ஆற்றுப் படுத்துவதற்குள் இன்னொரு படத்தைக் கொண்டாட நேர்வது ‘இனிய நிர்ப்பந்தம்..!’

‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம் – “ஐ லவ் யூ தமிழ் சினிமா..!”

முப்பட்டைக் கண்ணாடியின் உள்ளே வைத்த கலர் வளையல் துண்டுகள் நம் ஒவ்வொரு திருப்புதலுக்கும் ஒவ்வொரு நிறக்குவியலாய் மாறி வெவ்வேறு வர்ண வடிவம்…

Read More