
மோகன் செகண்ட் இன்னிங்ஸில் சந்தோஷ் பிரபாகரனின் முதல் இன்னிங்ஸ்..!
”வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் பத்திரிகையாளர் மகன்!
அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் பாதை மாறி செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள்.
அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டிப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு.
திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி…