December 26, 2024
  • December 26, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

மதுரை வங்கியில் பட்டப்பகலில் 10 லட்சம் கொள்ளை

by by May 1, 2018 0

மதுரை விளக்குத்தூண் பகுதியில் கிழக்கு ஆவணி மூலவீதியில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகமும், கிளை அலுவலகமும் இயங்கி வருகின்றன. அத்துடன் முதல் தளத்தில் கிளை அலுவலகமும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கான பிரிவுபசார விழா 4-வது மாடியில் நடக்க, அதில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் அனைவரும் சென்றிருந்தனர்.

காசாளரும் கேபினை பூட்டி விட்டு சென்று விட்டார். இதைப் பயன்படுத்தி ஒரு மர்மநபர் வங்கிக்குள் புகுந்து, கேபினுக்கு மேல் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு இருந்த இடைவெளியில்…

Read More

தமிழகத்தில் 1300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

by by Apr 30, 2018 0

நெடுஞ்சாலையை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாத பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 1,300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

அதன் பின்னணி…

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Read More

சேவைக் கட்டணம் வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் – ராமதாஸ்

by by Apr 28, 2018 0

இந்தியாவில் அனைத்து வங்கி சேவைக்ளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்து வருவதாக வந்த செய்தியை அடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

“இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகங்கள், பற்று அட்டைகள், அவற்றைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை வங்கிகள் செயல்படுத்தினால் அது வணிக வங்கிகளின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை…

Read More

ஹர்பஜன் சிங்கை பாரதியாக்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

by by Apr 27, 2018 0

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாட வந்தாலும் வந்தார். தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

அவரைக் குறித்த மீம்ஸ்களும் எப்போதும் சமூக வலை தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று முந்தினம் பெங்களூருவுடன் நடந்த ஐபிஎல் போட்டியில் போராடி கடைசி நேரத்தில் கேப்டன் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சிஎஸ்கே.

இது குறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சு கட்றதா… யாரு…

Read More

கிடு கிடுவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

by by Apr 24, 2018 0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாதத்திற்கு இரண்டு முறை இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த பழைய சிஸ்டத்தை மாற்றி, சென்ற ஆண்டு ஜூனில் இருந்து தினந்தோறும் விலையை நிர்ணயிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.

இதன் விளைவாகக் கண்ணுக்குத் தெரியாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதன் அடிப்படையில் இன்று பெட்ரோல் விலை இதுவரை…

Read More

நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை – ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்

by by Apr 1, 2018 0

தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக 49-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் மக்களின் பிரதிநியாக நானும் பங்கேற்பேன் என்று அறிவித்திருந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் இன்று போராட்டத்தில் பங்கேற்றார்.

அங்கு கமல் பேசியதிலிருந்து…

“எனக்கென்று ஒரு கட்சி இருந்தாலும் தனி மனிதனாக இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கமல்ஹாசன். நடிகன் என்பதை விட நான் மனிதன் – நான் தமிழன். உங்களுககு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதி வியாபாரப் பேராசையின் ஒரு கோரமுகம்.

இதுபற்றி…

Read More

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கமல் பங்கேற்பு

by by Mar 29, 2018 0

மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து…

“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைக்க முடியும். அப்படி இரு மாநிலத்தின் தண்ணீர் தேவைக்காக வாரியம் அமைப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்..!” என்றவர் காவிரி விவகாரம் தொடர்பான…

Read More

இளையராஜா, தோனி இன்று ‘பத்ம விருது’ பெறுகின்றனர்

by by Mar 20, 2018 0

‘பத்ம விருது’ அறிவிக்கப்பட்ட 84 வெற்றியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுகின்றன. 

2018 ம் ஆண்டைப்…

Read More

இந்தியா வெல்லாமல் போயிருந்தால் துரதிருஷ்டம் – அதிரடி தமிழன் தினேஷ் கார்த்திக்

by by Mar 19, 2018 0

இலங்கையின் 75வது சுதந்திர தினத் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொண்ட ‘நிதாஹஸ் கோப்பை’ கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின.

பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியா வெற்றி பெற கடைசி ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட, அப்போது பேட்டிங்க் செய்த தினேஷ் கார்த்திக் கடைச் பந்தில் ஆறு ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்து இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும்…

Read More