March 3, 2021
  • March 3, 2021
Breaking News

Currently browsing பெண்கள்

தியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்

by by Oct 23, 2018 0

தொடர்ந்து வரும் ‘மீ டூ’ புகார்களில் நேற்றைய செய்திகளில் நடிகரும், தயாரிப்பாளர் – இயக்குநருமான தியாகராஜனையும் குற்றம் சாட்டியிருந்தார் பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர்.

இந்த விவகாரத்தில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, குற்றம் சாட்டிய பெண் எங்கள் யூனிட்டில் இஅரண்டு நாள்கள்தான் வேலை செய்தார். மூன்றாம் நாள் உடல்நிலை சரியில்லை என்று வெளியேறிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர்மீது சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன்…” என்று…

Read More

இந்த உலகம் பொறுக்கிகளுக்கு உகந்தது – லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதில்

by by Oct 16, 2018 0

‘மீ டூ’ பதிவுகள் வலுப்பெற்ற பிறகு பிரபல பெண் கவிஞரும், டாகுமென்டரி பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமீபத்தில் தனக்கு ஒரு இளம் இயக்குநரிடம் இருந்து 2005-ல் அவரது காரில் வைத்து பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாகவும், கத்தியைக் காட்டி அதிலிருந்து மீண்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

பிறகு அந்த இயக்குநர் சுசி கணேசன்தான் என்று கூற, வெகுண்டெழுந்த சுசி கணேசன் அந்தக் குற்றச்சாட்டுக்கு முகநூலில் கீழ்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.

“லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும்…

Read More

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்

by by Oct 7, 2018 0

சபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தீர்ப்புக்கு பெரும்பாலும் ஆதரவு இருந்த போதிலும் தீர்ப்புக்கு எதிராகவும் ஐய்யப்ப பக்தர்கள் கருத்துகளைப் பரப்பி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சென்னை, டெல்லி, பெங்களூருவில் நடைபெற்றது

Ayyappa Devoties

Read More

வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018

by by Sep 26, 2018 0

வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய ‘மகளிர் ஆளுமை விருதுகள் 2018’ பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.
 
விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் ‘திரௌபதி முர்மு’ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.
 
விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடமிக்…

Read More

ஆன்ட்ரியா எழுதி பாடி நடித்த வீடியோ பாடலைப் பாருங்கள்

by by Sep 25, 2018 0

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆன்ட்ரியாவுக்கு நல்ல இசைத்திறமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். அவர் அவ்வப்போது யுவன் சங்கர் ராஜா ,ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார்.

இப்போது தன் ‘தி ஜெர்மையா புராஜக்ட் எங்கிற தன் இசை கம்பெனிக்காக ‘ஹானஸ்ட்லி’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இதன் சிறப்பு இதில் இடம்பெற்ற பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும்,பாடியும் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா…

Read More

காந்தி லலித்குமார் ஒரு சைக்கோ- டிவி நடிகை நிலானி பேட்டி வீடியோ

by by Sep 19, 2018 0

Courtesy – Puthiya Thalaimurai TV

Read More

தமிழிசை புகாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு சிறையில் உடல்நலக்குறைவு

by by Sep 4, 2018 0

சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  நேற்று பயணம் செய்தபோது அவரை பார்த்ததும் தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா என்ற பெண், “பாஜக ஒழிக…” என கோஷமிட்டார்.

இதைத்தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி அரசு…

Read More

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது

by by Jul 9, 2018 0

2012 டிசம்பர் 16-ந் தேதி இரவில் தலைநகர் டெல்லியில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆறு பேரில் முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொள்ள, மற்றொருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனை பெற்றான்.

மற்ற நான்கு குற்றவாளிகள் முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன்பின், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை…

Read More